மாணாக்கர் மதிப்பெண் ஆய்வுக்கூட்டம்
-----------------------------------------------------------------------------------------
பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய ஆய்வுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ப்தாம் வகுப்பு மாணாக்கரது பெற்றோர் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர் . தலைமையாசிரியர் திருமதி.ஆனந்தி தலைமையில் , பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது . உதவி தலைமையாசிரியர் Palanisamy Chinnusamy பெற்றோர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார் . பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் அவரவர் பாடங்களில் மாணவர்களின் முன்னேற்றம் பற்றிக் கூறினர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரன் , பட்டதாரி ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். இக்கூட்டத்தில் ஒவ்வொரு மாணவரின் பாடவாரியான மதிப்பெண் பற்றி அவர்தம் பெற்றோரிடம் அந்தந்தப் பாட ஆசிரியர்கள் விளக்கிக் கூறி அறிவுரை வழங்கினர். நூற்றுக்கு நூறு- தேர்ச்சியும் மதிப்பெண்ணும் என்பதே எங்களது நோக்கம். இதற்கேற்ப அழைப்பிற்கு இணங்கி பெற்றோர் அனைவரும் வருகை புரிந்திருந்தனர் . அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் .