வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் |
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில் 24.01.2014 அன்று வாக்காளர் தினம் கொண்டாடப் பட்டது.
அன்றைய தினம் வாக்களிப்பதன் இன்றியமையாமை பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நோட்டா (NOTA - NONE OF THE ABOVE) வாக்களித்தல் பற்றி விளக்கப்பட்டது. மாணவ மாணவியர் , ஆசிரியப்பெருமக்கள் மற்றும் பொதுமக்களும் நம் பள்ளித் தலைமையாசிரியரின் முன்னிலையில் ”வாக்காளர் உறுதிமொழி” எடுத்துக்கொண்டனர்.
வாக்காளர் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்தும் வகையில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர் ஊக்குவிக்கப்பட்டனர் .