பாரதத் திருநாட்டின் 65ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில் குடியரசு தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவிற்கு தலைமையாசிரியை திருமதி.எஸ்.இராஜாமணி அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் திரு.தங்கராசு அவர்கள் முன்னிலை வகித்தார். பெருந்தொழுவு ஊராட்சிமன்றத் தலைவர் திரு.கருப்பன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
இந்தியா குடியரசான வரலாற்றினை முதுகலை வணிகவியல் ஆசிரியர் திரு.பொ.மாசிலாமணி அவர்கள் சுவைபட எடுத்துரைத்தார்.