தகவல் துளிகள்

For Online Admission Click Here * ஆன்லைனில் அட்மிசன் பெற இங்கே கிளிக் செய்யவும் * Tamil & English Medium * HI-TECH Computer Lab * Smart Classrooms * ATAL Tinkering Lab * Robotics * Drone Technology * Library * Safe R.O Water * Hi-Speed Internet Facility *

புரவலர் திட்டம்

பள்ளியின் வளர்ச்சியில் பங்குபெற புரவலர் ஆகுவீர்...

                  நம்மை வளர்த்த பள்ளியின் வளர்ச்சியில் நம் பங்கும் இருக்க வேண்டும்...பள்ளிக்குத் தேவையான வசதிகளை அரசே வழங்கினாலும் தொடர் பராமரிப்புக்கும் , புதிய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் சமுதாயத்தின் பங்களிப்பினைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் அரசால் உருவாக்கப்பட்டது தான் ”புரவலர் திட்டம்”... இந்தத் திட்டத்தின்கீழ்  ரூபாய் ஆயிரம் (அல்லது அதற்கு மேல்) வழங்கி பள்ளி வளர்ச்சியில் பங்குகொள்பவர் புரவலர் என அழைக்கப்படுவார்...

                 புரவலர்கள் வழங்கும் தொகை பள்ளியின் புரவலர்திட்ட வங்கிக்கணக்கில் வட்டியை மட்டும் பெறும் வகையில் நிலையான வைப்பாக வைக்கப்படும்.இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும் பள்ளி வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் பள்ளியின் புரவலர் என்பதற்கான பட்டயம் (நற்சான்றிதழ்) தங்களுக்கு வழங்கப்படும்.

                 புரவலர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் பள்ளியின் புரலவராகும் ஒவ்வொருவரது பெயரும் பள்ளியின் முகப்பில் ”பள்ளியின் புரவலர்கள்” என்னும் தலைப்பின்கீழ் தாங்கள் வழங்கிய தொகையுடன் குறிப்பிடப்படும்.மேலும், பள்ளியின் புரலவராகும் ஒவ்வொருவரது பெயரும் தங்கள் புகைப்படத்துடன் ”பள்ளியின் புரவலர்கள்” என்னும் தலைப்பின்கீழ் தாங்கள் வழங்கிய தொகையுடன் பள்ளியின் இணையதளமான (வலைப்பூ) www.peruntholuvughss.blogspot.com மற்றும் www.peruntholuvughss.tk ஆகியவற்றில் வெளியிடப்படும்.இதுவரை இரண்டு பேர் மட்டுமே பள்ளியின் புரவலராக உள்ள நிலையில் அதிக எண்ணிக்கையிலான புரவலர்களைச் சேர்க்கும்  எங்கள் நோக்கில்  தங்களது மேலான பங்களிப்பைச் செலுத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நமது பள்ளியின் முகநூல் பக்கம் - www.facebook.com/ghssperuntholuvu
 குறிப்பு : வெளியூரில் உள்ளவர்கள் புரவலராக விரும்பினால் பள்ளியின் வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம்.மேலும் விபரங்களுக்கு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.