இங்கு இலவசக் கல்வியுடன் அரிய பல நலத்திட்டங்களும் மாணவர்களுக்காகக் காத்திருகின்றன ....
அவை வருமாறு :
1. விலையில்லாப் பாடநூல்
2. விலையில்லா நோட்டுப் புத்தகங்கள்
3. விலையில்லா வண்ணப் பென்சில்கள்
4. விலையில்லாக் கணித உபகரணப்பெட்டி
5. விலையில்லாக் காலணிகள்
6. விலையில்லா புவியியல் வரைபட நூல்
7. விலையில்லா சீருடைகள்
8. விலையில்லா மடிக் கணினி
9. விலையில்லா மிதிவண்டி
10.விலையில்லா புத்தகப் பை
11.சத்துணவில் கலவை சாத வகைகள்
12.இலவச பேருந்து பயண அனுமதிச் சீட்டு
13.மாணவர் இடை நிற்றலைத் தவிர்க்க 10,11,12 ஆம் வகுப்புகளைத் தொடர்ந்து பயின்று முடிக்கும் மாணவ மாணவியர்க்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூபாய் ஐயாயிரம்
14.வருமானம் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி
15.மாணவர்களுக்கு பள்ளியின் மூலம் சாதி , வருமானம், இருப்பிடச் சான்றுகள் பெற்றுத் தருதல்